Home இலங்கை அரசியல் புது தும்புத்தடி எதையும் கூட்டாது : அநுரவை கடுமையாக விமர்சித்த சுமோ

புது தும்புத்தடி எதையும் கூட்டாது : அநுரவை கடுமையாக விமர்சித்த சுமோ

0

தமிழ் தேசியம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) நடவடிக்கைகள் எதுவும் தமிழ் மக்களை திருப்திப்படுத்தாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “மக்கள் நினைக்கவில்லை அநுர வெல்லுவார் என்று, ஆனால் தற்போது இதற்கு முன்பு தேர்தலில் மூன்று சதவீத வாக்கு பெற்ற ஒருவர் இப்போது 42 சதவீதம் வாக்கு பெற்றதும் மந்திரவாதி வந்துவிட்டார் இவர் எல்லாவற்றையும் மாற்றி அமைப்பார் இவரிடம் கொடுத்து பார்க்கலாம் என அவர்கள் நினைக்கின்றனர்.

அநுரவின் நடவடிக்கைகள்

இந்தநிலையில், அவருக்கும் மக்கள் கொஞ்ச காலம் வழங்குவார்கள், மாற்றங்களை கவனிப்பார்கள் அவ்வாறு எந்த மாற்றமும் இல்லாத பட்சத்தில் அவரது பதவியும் பறிக்கப்படும்.

குறிப்பாக, தமிழ் தேசியம் குறித்து அவர் என்ன செய்யப்போகின்றார் என்பதை மக்கள் கவனிப்பார்கள் ஆனால் அது தமிழ் மக்களுக்கு திருப்தி அளிக்காது.

அத்தோடு, இது எங்களுக்கான தற்காலிக பின்னடைவே தவிர விரைவில் இந்த புது தும்புத்தடி எதையும் கூட்டி தள்ளாது என்பதை மக்கள் உணருவார்கள்.

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, அநுர நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை தானே.

ஜனாதிபதி என்னை தொடர்பு கொண்டு இது தொடர்பாக கேட்ட போதும் நான் விளக்கம் அளித்து இருந்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version