எந்த விதத்திலாவது நாடாளுமன்றத்தில் நுழைந்து அமைச்சர் பதவியை பெற்று தான் இறந்த பின்பும் முன்னாள் அமைச்சர் என அழைக்கப்பட வேண்டும் என்ற பதவி ஆசையில் சுமந்திரன் செயற்படுவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி (Chidambaram Karunanidhi) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் அமைச்சர் பதவியில் போட்டியிட சுமந்திரன் தயாராகி வருவதாக தனவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
எனவே, இதற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக டக்ளசையும் இணைத்து கொள்ளுகின்றனர்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழ் மக்களின் அரசியல் களம், சுமந்திரனின் அரசியல் நகர்வு, மற்றும் தற்போது தமிழரசுக் கட்சியின் கூட்டணி என்பவை தொடர்பில் அவர் பலதரப்பட்ட கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/aNqnisONBt0

