Home விளையாட்டு நாளைய லோர்ட்ஸ் போட்டியுடன் விடைபெறும் ரோகித் சர்மா..! வெளியான அறிவிப்பு

நாளைய லோர்ட்ஸ் போட்டியுடன் விடைபெறும் ரோகித் சர்மா..! வெளியான அறிவிப்பு

0

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முக்கியமான ஒருநாள் போட்டி நாளை (19) நடைபெற உள்ளது.

இந்தப் போட்டி, இங்கிலாந்தில் உள்ள ‘கிரிக்கெட்டின் தாயகம்’ என்று அழைக்கப்படும் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.

இருப்பினும், இந்தப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா எதிர்காலத்தில் இந்திய அணித் தேர்வுக்குப் பரிசீலிக்கப்பட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளதாக ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

நாளையதினம் ரோஹித் சர்மாவின் கடைசி சர்வதேசப் போட்டி

அதன்படி, நாளையதினம் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியே ரோஹித் சர்மாவின் கடைசி சர்வதேசப் போட்டியாக இருக்கலாம் என்று அந்த ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

எனினும், ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த செய்திகளுக்குப் பதிலளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின்(பிசிசிஐ) செயலாளர் தேவாஜித் சாய்கியா, நாளை லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியை ரோஹித்தின் கடைசிப் போட்டியாகக் கருதி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அறிவிப்பு

அணியின் திட்டங்களில் அவருக்கு இடம் இருக்கும் வரை, இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என்று தேவாஜித் சாய்கியா வெளிநாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

“ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம் குறித்து ஊடகங்களில் பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை லோர்ட்ஸில் நடைபெறும் போட்டியை ரோஹித்தின் கடைசிப் போட்டியாகக் கருதி எந்த விவாதமும் நடைபெறவில்லை என்பதை நான் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன்.

ரோஹித் இந்திய ஒருநாள் அணியின் நிரந்தர உறுப்பினர். அணியின் திட்டங்களில் அவருக்கு இடம் இருக்கும் வரை, அவர் நாட்டிற்காக தொடர்ந்து விளையாடுவார். வேறுவிதமாகக் கூறினால், லோர்ட்ஸில் நடைபெறும் ஒருநாள் போட்டி அவருடைய கடைசிப் போட்டி அல்ல,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.   

Source: https://ibctamil.com/article/sundays-lords-match-not-rohits-last-match-1784374209

NO COMMENTS

Exit mobile version