நடிகர் சூர்யாவின் கங்குவா படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி இருந்தது. நெகடிவ் விமர்சனங்களால் இந்த படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. 2000 கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளர் கூறி இருந்தாலும் படம் ரசிகர்களை கவராத காரணத்தால் நஷ்டம் அடைந்தது.
அடுத்து சூர்யா கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை முடித்துவிட்டார். அதன் பின் RJ பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தை தொடங்கி இருக்கிறார். அதன் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Pan இந்தியா படம்..
இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படம் பற்றி ஒரு புது தகவல் வெளியாகி இருக்கிறது. லக்கி பாஸ்கர் என்ற ஹிட் படம் கொடுத்த இயக்குனர் வெங்கி அட்லூரி உடன் தான் சூர்யா கூட்டணி சேர்கிறார். லக்கி பாஸ்கர் படத்தை தயாரித்த சித்தாரா நிறுவனம் தான் சூர்யா படத்தையும் தயாரிக்கிறது.
இந்தியாவில் மாருதி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட கதையை பற்றியது தான் இந்த படம் என்றும் ஒரு தகவல். அதனால் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.