யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் 21 போத்தல்கள்
கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (21.10.2025) இடம்பெற்றுள்ளது.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு
பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ்
போதைத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, இந்த கைது நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
