Home இலங்கை சமூகம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவருக்கு எயிட்ஸ்

ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவருக்கு எயிட்ஸ்

0

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 41 வயதுடைய நபருக்கு எச்.ஐ.வி வைரஸ் தொற்று இருப்பது சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர்தெரிவிக்கின்றனர்.

கண்டி, தொடம்வல பிரதேசத்தை சேர்ந்த இவர் கேகாலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலத்தின் உண்மை நிலை 

கேகாலை காவல்துறையினரால் அழைக்கப்பட்ட அறிக்கையில் சந்தேகநபரின் வாக்குமூலத்தின் உண்மை நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனைக்கு பழக்கப்பட்டவர் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.   

 

Source: https://ibctamil.com/article/suspect-caught-with-ice-gets-aids-1721636524

NO COMMENTS

Exit mobile version