Home இலங்கை குற்றம் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேக நபருக்கு பிணை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேக நபருக்கு பிணை

0

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், குற்றவியல் குழு தலைவருமான “கணேமுல்ல
சஞ்சீவ” என்றும் அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னேவின் கொலையில்
தொடர்புடையதாக கூறி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கு பிணை
வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதுருகிரிய
பொலிஸில் பணியாற்றும் கொன்ஸ்டபிளுக்கே கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை
வழங்கியது.

கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து சந்தேக நபர்
பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

சந்தேக நபருக்கு எச்சரிக்கை

அதன்படி, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க சந்தேக நபரை 50,000
ருபாய் ரொக்கப் பிணையிலும், தலா ரூ. 2.5 மில்லியன் இரண்டு சரீரப் பிணையிலும்
செல்ல உத்தரவிட்டார். 

வழக்கில் சாட்சிகள் எவரையும் அச்சுறுத்தக் கூடா து என்றும் சந்தேக நபருக்கு
எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரை தப்பிக்க வாகனம்
வழங்கியதாகவும், உதவியதாகவும் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

NO COMMENTS

Exit mobile version