மட்டக்களப்பு- ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒரு வயது குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று முன்தினம்(27) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி- தீர்த்தகரை வீதியிலுள்ள வீடு
ஒன்றில் வாழ்ந்து வரும் பெண் ஒருவருக்கும் அவரது உறவினருக்கும் இடையே இடம்பெற்ற பண
கொடுக்கல் வாங்கலையடுத்து வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
மூவர் படுகாயம்
இதனையடுத்து, பெண்ணின் உறவினரான ஆண் பெண்மீது வாளால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டதையடுத்து
பெண்ணும் அவரது ஒரு வயது குழந்தையும் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த குழந்தையும் அவரது தாயாரும் மட்டு போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலதிக விசாரணை
அதேவேளை குறித்த பெண்மீதும் அவரது
குழந்தை மீதும் தாக்குதலை நடாத்தியவர் காயமடைந்து நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு
வருகின்றனர்.
