Home இலங்கை குற்றம் யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்: பொலிஸாரால் மூவர் கைது

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்: பொலிஸாரால் மூவர் கைது

0

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைச் சம்பவம் தொடர்பாக
மூன்று சந்தேகநபர்கள் நேற்றையதினம் (21) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் மேற்கொள்ளப்பட்ட கைது
நடவடிக்கையின்போது மூன்று கூரிய வாள்களும் மோட்டார் சைக்கிளும்
கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது

உதயபுரம் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு சகோதரர்கள் மீது இடம்பெற்ற வாள்
வெட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போதே இந்தக் கைது நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டது.

அரியாலை நாயன்மார்கட்டை சேர்ந்த 25,28,30 வயதுடைய மூவரே இவ்வாறு கைது
செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார்
நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Source: https://tamilwin.com/article/sword-attack-in-jaffna-3-arrested-1750575426

NO COMMENTS

Exit mobile version