முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்: வெட்டிய கையை எடுத்துச் சென்ற கும்பல்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று(31)இரவு  இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு

கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு

 கையை எடுத்துச் சென்ற கும்பல்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு வாள்களுடன் சென்ற குழு ஒன்று பருத்தித்துறை தம்பசிட்டி வட்டுவன்
பகுதியில் உள்ள நபர் ஒருவர் மீது வாளால் வெட்டி தாக்கியுள்ளனர்.

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்: வெட்டிய கையை எடுத்துச் சென்ற கும்பல்...! | Sword Cutting Attack In Jaffna

இதனையடுத்து வாளால் வெட்டியபோது கீழே
வீழ்ந்த கை துண்டையும் எடுத்துச் சென்றுள்ளதாக காவல்துறை தகவல்கள்
தெரிவிக்கின்றன.

சம்பவத்தில்  கையை இழந்தவர் செல்வநாயகம் செந்தூரன் எனும் 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார்.

யாழ் ஆலயமொன்றில் தேங்காய் உடைத்த நபர் உயிரிழப்பு!

யாழ் ஆலயமொன்றில் தேங்காய் உடைத்த நபர் உயிரிழப்பு!

மேலதிக சிகிச்சை

மேலும் வாள் வெட்டுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்: வெட்டிய கையை எடுத்துச் சென்ற கும்பல்...! | Sword Cutting Attack In Jaffna

இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த (11) இளைஞர் ஒருவர் மீது  வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

புங்குடுதீவு வித்தியா விவகாரம் : சிறையிலிருந்த கைதி உயிரிழப்பு

புங்குடுதீவு வித்தியா விவகாரம் : சிறையிலிருந்த கைதி உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்