Home உலகம் தலிபான் நிர்வாகம் குறித்து மலாலா யூசுப்சாய் கடும் கண்டனம்!

தலிபான் நிர்வாகம் குறித்து மலாலா யூசுப்சாய் கடும் கண்டனம்!

0

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் நிர்வாகம் பெண்களை மனிதர்களாக மதிப்பதில்லை என அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய்(Malala Yousafzai) கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தலிபான் நிர்வாகம் பெண்களுக்கு எதிரான அடக்கு முறை கொள்கைகளை அதிக அளவில் பிரயோகிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இஸ்லாமிய நாடுகளில் பெண் கல்வி குறித்து பாகிஸ்தான் நடத்திய சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இந்த கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

யூசுப்சாய் விடுத்த கோரிக்கை

இந்த செயல்பாட்டினை முடிவிற்கு கொண்டு வரும் நோக்கில், சர்வதேச முஸ்லிம் தலைவர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் நிர்வாகம் பெண்களுக்கு எதிராக பல கொள்கைகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version