Home இலங்கை அரசியல் அநுரவின் அரசாங்கத்துக்கு எதிராக திரட்டப்படும் வலதுசாரி கட்சிகள்

அநுரவின் அரசாங்கத்துக்கு எதிராக திரட்டப்படும் வலதுசாரி கட்சிகள்

0

இலங்கையின் வலதுசாரி கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம் மரிக்கார் இன்று ஊடகங்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டணியில் தலைவர் யார் என்பது முக்கியமல்ல, ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி மிகப்பெரிய எதிர்க்கட்சி என்பதால் அதில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தி, தற்போது நாடாளுமன்றத்தில் 40 இடங்களைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், நடப்பு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில், ரணில் தரப்பும், சஜித் தரப்பும் இணைவது குறித்து சந்திப்புகள் இடம்பெறுகி;ன்ற செய்திகள்; வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version