முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! 200 ரூபாவில் கிடைத்த பாரிய வெற்றி

இந்தியாவின் பிரபல கேரள கிறிஸ்துமஸ் பம்பர் லொட்டரியில் தமிழகத்தை சேர்ந்த இளைஞன் 1 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசை வென்றுள்ளார்.

கேரள அரசு கடந்த நவம்பர் மாதம் கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி டிக்கெட்டை அறிவித்தது. எப்போதும் போல இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசு தொகையையும் உயர்த்தியது.

இதில் முதல் பரிசாக ரூ.20 கோடி, இரண்டாம் பரிசாக 20 பேருக்கு தலா 1 கோடி ரூபாய், 10 வரை பரிசுகளும், ஆறுதல் பரிசுகளும் அறிவிக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் லொட்டரி டிக்கெட்டை வாங்கி குவித்தனர்.

நீக்கப்படும் விசா நடைமுறை : சீனா சிங்கப்பூர் இடையே வலுக்கும் உறவு

நீக்கப்படும் விசா நடைமுறை : சீனா சிங்கப்பூர் இடையே வலுக்கும் உறவு

 200 ரூபாவில் பாரிய வெற்றி

இந்த கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லொட்டரிக்கான இரண்டாம் பரிசான 1 கோடி ரூபாயை தமிழகத்தை சேர்ந்த இளைஞர் இன்பதுரை (24) வென்றுள்ளார். இவர் தமிழக மாவட்டம், மதுரையில் உள்ள கடைவனகல் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு தாய், ஒரு சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

தமிழ் இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! 200 ரூபாவில் கிடைத்த பாரிய வெற்றி | Tamil Boy Won Indian Lottery Jackpot

கடந்த 7 ஆண்டுகளாக கேரளாவில் உள்ள கோடமாம் கீர்த்தி பர்னிச்சர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், தினமும் ரூ.200 க்கு லொட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அந்தவகையில் கோட்டமத்தில் லொட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் பவுலஸ் என்பவரிடம் 2 லொட்டரி டிக்கெட்டுகள் வாங்கிய நிலையில் அதில் ஒன்றிற்கு இந்த மெகா பரிசு கிடைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்