Home இலங்கை சமூகம் யாழ் பல்கலை முன்றலில் தமிழினப் படுகொலையை வெளிப்படுத்தும் பதாகைகள்

யாழ் பல்கலை முன்றலில் தமிழினப் படுகொலையை வெளிப்படுத்தும் பதாகைகள்

0

யாழ்ப்பாண பல்கலைக்கழக (University of Jaffna) முன்றலில் தமிழினப் படுகொலையை வெளிப்படுத்தும் முகமாக பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இன்று (23) யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள நிலையிலேயே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதுடன், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களையும் சந்திப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள்

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படுகின்ற ”அணையா விளக்கு” போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் (25.06.2025) தொடர்கின்றது.

நண்பகல் 12 மணிக்கு புதைகுழி கண்டறியப்பட்ட சித்துப்பாத்தி மயானத்தில் இருந்து ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி அங்கிருந்து, செம்மணி வீதி வழியாக சென்று ஐ.நா வதிவிடப் பிரதிநிதியின் பணிமனையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று, மனு கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/XnpfgdPDUWg

NO COMMENTS

Exit mobile version