யாழ் (Jaffna) தையிட்டி பகுதியில் இடம்பெறும் போராட்டத்தில் செய்தி சேகரிக்க தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
யாழ். தையிட்டி பகுதியில் உள்ள திஸ்ஸ விகாரையானது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அப்பகுதியில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில், பொசன் போயா தினமான இன்றையதினமும் (10) அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனுமதி மறுப்பு
இந்தநிலையில் குறித்த இடத்தில் செய்தி சேகரிக்க சிங்கள ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பபட்டுள்ள நிலையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று (10) காலை முதல் குறித்த இடத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/7pHmNQTxgM0
