தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) புற்று நோயினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுகவீனமுற்றிருப்பதால் கட்சியின் தலைமைப் பொறுப்பும் நிர்வாகப் பொறுப்பும் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அவருக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்ற முடியாத நிலையில் மூன்று மாத காலத்துக்கு விடுமுறை கோரியுள்ளதாகவும் அதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
3 மாத விடுமுறை
இதேவேளை, புற்று நோய்க்கு வெளி நாடுகளில் இருந்து சிகிச்சை பெற்று வந்த அவர், இதுவரை குணமாகவில்லை என்றும் குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்றையதினம் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்லவினால் (Lakshaman Kiriella)கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஜூலை 2 ஆம் திகதியிலிருந்து 3 மாத காலங்களுக்கு விடுமுறையளிக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது.