தமிழ் தேசிய அரசியல் சில பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை தலைவர் ரி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மக்களை மோசமாக பாதித்ததை அடுத்து மக்கள் தமிழ் தேசிய அரசியலில் இருந்து சற்று பின்வாங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழ் தேசிய அரசியலை சரியாக முன்னெடுக்கின்ற தரப்பினர் மக்களின் பொருளாதாரம் தொடர்பான விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் யாழ்.பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

