Home சினிமா சொந்தமாக தொழில் செய்யும் சின்னத்திரை பிரபலங்கள் யார் யார்?… என்ன தொழில்கள் முழு விவரம்

சொந்தமாக தொழில் செய்யும் சின்னத்திரை பிரபலங்கள் யார் யார்?… என்ன தொழில்கள் முழு விவரம்

0

டிவி பிரபலங்கள்

வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை பிரபலங்களுக்கு தான் மக்களிடம் மவுசு அதிகம்.

இதனால் படங்களை விட சீரியல்களில் தான் நடிக்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். தொடர்கள் நடிப்பது, ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொள்வது, தனியார் நிகழ்ச்சிகள் செல்வது, நிறைய போட்டோ ஷுட் நடத்துவது என செம பிஸியாக உள்ளார்கள்.

அப்படி சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமானவர்கள் சொந்தமாகவும் தொழில்கள் செய்து வருகிறார்கள்.

அப்படி யார் யார் என்ன தொழில் செய்கிறார்கள் என்ற விவரம் இதோ,


சந்தோஷி

சில படங்கள் நடித்து பின் சின்னத்திரை பக்கம் வந்து மரகத வீணை, அரசி, அண்ணி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார் இவர் சென்னையில் சொந்தமாக மேக்கப் ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.


நடிகர் ஸ்ரீ

ஆனந்தம், அஹல்யா, மலர்கள், பந்தம், இதயம் மற்றும் யாரடி நீ மோகினி ஆகிய சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகுமார். இப்போது சன் டிவியின் வானத்தை போல தொடரில் பாசமுள்ள அண்ணனாக நடித்து வருகிறார்.

இவர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறாராம்.


பப்லு

தமிழ், தெலுங்கு படங்களில் வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர் அரசி, வாணி ராணி, கண்ணான கண்ணே உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர் சென்னையின் புறநகரில் பல ஹோட்டல்களை செந்தமாக வைத்திருக்கிறார்.


வனிதா விஜயகுமார்

நாயகியாக கலக்கி வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான இவர் சென்னையில் சொந்தமாக ஃபேஷன் பொட்டிக்கை நடத்தி வருகிறார்.


ஸ்ருத்திகா

சினிமாவில் நுழைந்த நேரத்தில் சில படங்களே நடித்தவர் குக் வித் கோமாளி ஷோ மூலம் மக்களிடம் நன்கு பிரபலம் ஆனார்.

அழகுசாதனத் துறையில் ஆர்வம் கொண்டவர் இரண்டு பிரபலமான அழகுசாதனப் பிராண்டுகளை வைத்திருக்கிறார்.


சஞ்சீவ் வெங்கட்

பிரபல நடிகர் சஞ்சீவ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என கலக்கியவர். இவர் தனது குடும்பம் நடத்தும் காபி ஷாப் தொழிலை கவனித்து வருகிறார்.


விஜே மகேஸ்வரி

பிரபல தொகுப்பாளினியாகவும், பிக்பாஸ் போட்டியாளராகவும் கலக்கி வரும் விஜே மகேஸ்வரி சொந்தமாக ஓரு உணவகத்தை வைத்திருக்கிறார், அதோடு பேஷன் பொட்டிக்கையும் வைத்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version