Home உலகம் கனடா பட்டமளிப்பு விழாவில் இலங்கை இராணுவத்தை கடுமையாக சாடிய தமிழ் மாணவி

கனடா பட்டமளிப்பு விழாவில் இலங்கை இராணுவத்தை கடுமையாக சாடிய தமிழ் மாணவி

0

கனடாவில் (canada) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் பங்குபற்றிய தமிழ் மாணவி இலங்கை இராணுவத்தை கடுமையாக சாடியுள்ளார்.

இலங்கையில் (srilanka) இன்று வரையிலும் தமிழ் மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தொடர்வதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கனடாவின் வின்ட்ஸோர் பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வில் சரிகா நவநாதன் என்ற தமிழ் மாணவியின் உரை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இன வன்முறைகளுக்கு எதிராக குரல்

இன வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த மாணவர்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வித தடையும் இன்றி பாதுகாப்பான முறையில் கனடாவில் தாம் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வரப்பிரசாதம் தமது தாயக பூமியான இலங்கை மாணவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் பலஸ்தீனத்தில் தற்பொழுது இதே நிலைமை நீடித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://ibctamil.com/article/tamil-woman-blame-sri-lankan-army-in-canada-viral-1718419222

NO COMMENTS

Exit mobile version