மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்று திறனறிதல் 2025 ஆம் ஆண்டிற்கான போட்டிகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் இந்த போட்டிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த போட்டி இன்றும் (15) மற்றும் நாளையும் (16) காலை ஒன்பது மணிமுதல் இரவு ஏழு மணி வரை இடம்பெறவுள்ளது.
இதற்குரிய இணைப்பு இணைய ஊடகங்களிலும் முகநூல் மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் வயதுகட்டுப்பாடுகள் இன்றி அனைவரும் பங்குகொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறிபபிட்ட நேரத்தில் தமது திறனறிதலைச் செய்து முடிக்கும் பரீட்சார்த்திகளுக்கு சான்றிதழ்கள் மின்னஞ்சலில் அனுப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
