Home இலங்கை குற்றம் கொழும்பில் ஆசிரியர் ஒருவரின் கொடூர செயல் – தூக்கி வீசப்பட்ட இளைஞன்

கொழும்பில் ஆசிரியர் ஒருவரின் கொடூர செயல் – தூக்கி வீசப்பட்ட இளைஞன்

0

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிபிட்டிய கலல்கொட பகுதியில் ஒரு இளைஞனை தூக்கி தரையில் வீசிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பொறியாளர் ஷெஹான் விதானபதிரண என்ற இயற்பியல் ஆசிரியர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட இளைஞனின் கடைக்கு முன்னால் மோட்டார் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சிறிய தகராறின் விளைவாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடை உரிமையாளர்

பாதிக்கப்பட்ட இளைஞனின் உள் உறுப்புகளில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஷெஹானுக்கு சொந்தமான வெள்ளை நிற ஹோண்டா வெசல் கலல்கொட, பன்னிபிட்டி வீதியில் உள்ள கடை ஒன்றின் முன் நிறுத்தப்பட்டிருந்தது.

கடை உரிமையாளர் அதை அகற்றுமாறு கேட்டதில் கோபமடைந்த காரின் உரிமையாளரான ஆசிரியர் ஒரு இளைஞரை தூக்கி தரையில் வீசியதை சிசிடிவி காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

தாக்குதலுக்குள்ளானவர் பிரபல திருமண திட்டமிடுபவரான லசந்தா என்ற இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version