முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி
பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (03.04.2024) இடம்பெற்றுள்ளது.

ஒலியை விட வேகமாக செல்லும் ஏவுகணையை சோதனையிட்ட வடகொரியா

ஒலியை விட வேகமாக செல்லும் ஏவுகணையை சோதனையிட்ட வடகொரியா

பொலிஸ் விசாரணை

வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன்
நேற்று பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதையடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில்
தனதுஆசிரியர் தாக்கியதாக தெரிவித்துள்ளான்.

இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு
கொண்டு சிறுவனை தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்கு கீழ் அடித்து
இருக்கலாமே என்றும் கூறியுள்ளார்.

வவுனியாவில் ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதி | Teacher Assaults Grade 2 Student

இதற்கு பதில் அளித்த ஆசிரியர் உங்கள் மகனுக்கு கற்பித்த பாடம் தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தேன் என்றும் அடிக்கும் போது
சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் காயம் ஏற்பட்டு விட்டது என்றும் பதிலளித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறு கேள்வி கேட்கும் நீங்கள் நாளையுடன் பிள்ளையை வந்து கூட்டி
சென்றுவிடுங்கள் என்று எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி ஆசிரியர் பதில்
அளித்துள்ளார்.

இதனை ஆட்சேபித்த பெற்றோர் சிறுவனை நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா
பொது வைத்தியசாலையில் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

வவுனியாவில் ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதி | Teacher Assaults Grade 2 Student

இந்நிலையில் சிறுவனின் நெற்றியில் காயமும் கண் பாதிப்படைந்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சட்ட
வைத்திய அதிகாரியின் விசாரணைக்கும் உட்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண பிரதம செயலாளருடன் இந்திய உதவித்துணைத்தூதுவர் சாய் முரளி சந்திப்பு

வடமாகாண பிரதம செயலாளருடன் இந்திய உதவித்துணைத்தூதுவர் சாய் முரளி சந்திப்பு

இம்ரானின் மனைவிக்கு கொடுக்கப்பட்ட விசம் : எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு

இம்ரானின் மனைவிக்கு கொடுக்கப்பட்ட விசம் : எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்