Home இலங்கை சமூகம் வடக்கு – கிழக்கில் செயலிழந்திருந்த தொலைபேசி சேவைகள் வழமைக்கு..

வடக்கு – கிழக்கில் செயலிழந்திருந்த தொலைபேசி சேவைகள் வழமைக்கு..

0

வடக்கு – கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு நாளாக செயலிழந்திருந்த கையடக்க தொலைபேசி மற்றும் இணைய வசதிகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நேற்றிலிருந்து இணைய வசதிகளும் தொலைபேசி வசதிகளும் முற்றுமுழுதாக செயலிழந்திருந்தன. 

தற்போதைய நிலைமை.. 

இந்நிலையில், பொதுமக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

மேலும், குறித்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகள், மின்சார துண்டிப்பு, அங்குள்ள இணைய வசதிகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவே தொலைபேசிகள் செயலிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இவ்வாறான நிலையிலேயே தற்போது குறித்த தொடர்பு சேவைகள் வடக்கு – கிழக்கு பகுதிகளில் மீண்டும் செயற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

NO COMMENTS

Exit mobile version