கடந்த மாதம் 27ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக
நுவரெலியா மாவட்டம் அதிகம் பாதித்தது.
இதில் அதிகமாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக அக்கரபத்தனை – மன்ராசி
ஊட்டுவள்ளி பழமையான பாலம் இடிந்து விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
குறித்த இரும்பு பாலத்தை பயன்படுத்தும் சுமார் ஆறு தோட்டங்களைச் சேர்ந்த
சுமார் 3000 பேருக்கு மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத்
தெரிவித்துள்ளனர்.
செல்ல முடியாத நிலை
இதன்படி ஊட்டுவள்ளி, வெங்கட்டன், கொடமல்லி, பச்சபங்களா, நல்லதண்ணி மற்றும்
உருலேக்கர் உள்ளிட்ட ஆறு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், பாடசாலை
மாணவர்கள் மற்றும் முதியவர்கள் எனப் பலரும் தமது அன்றாடத் தேவைகளுக்காக இந்தப்
பாலத்தையே கடந்துதான் சென்றுள்ளனர்.
பாலம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற சந்தர்ப்பத்தில் சுமார் 5 கி.மீ சுற்றி
செல்ல வேண்டும் எனவும் இதனால் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் மாணவர்கள்
மற்றும் பணிக்கு செல்லும் தொழிலாளர்களும் அவதியுற்றுள்ளனர்
இதனால் அந்த வழியாக
பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
குறிப்பாக பாடசாலை மாணவர்கள், நோயாளி்கள் மற்றும் அன்றாடத் தேவைகளுக்காக
மன்ராசி, டயகம, அக்கரபத்தனை, தலவாக்கலை, லிந்துலை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட
பிரதான நகரங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அபாயம் ஏற்படுவதற்கு முன்னர்
குறித்த பகுதியில் தரமற்ற முறையில் தற்காலிக பாலம் அமைப்பதால்தான் அடிக்கடி
உடைவதாக அப்பகுதி மக்கள் குற்றம் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இரும்பு
பாலமே நீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது இதில் தற்காலிகமாக இரண்டு மரங்களை
குறுக்கே இட்டு துண்டாக வெட்டப்பட்ட சிறிய மரங்களையும் கொண்டு பாலம்
அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நிரந்தரமாக வைத்துக் கொள்ள முடியாது இரும்பால்
அமைத்திருந்த பாலமே அடித்து செல்வது என்றால் மரம் பாலம் அடுத்த வெள்ளத்தில்
அடையாளமே தெரியாமல் போய்விடும்.
எனவே குறித்த இடத்தில் பாதுகாப்பு இன்றி தற்காலிகமாக அமைக்கப்பட்ட
மரப்பாலத்தில் விபத்து ஒன்று ஏற்பட்டு உயிர்ச் சேதம் ஏற்படும்.
அபாயம்
ஏற்படுவதற்கு முன்னர் இவ்விடத்தில் தரமான புதிதாக பாலம் கட்ட நடவடிக்கை தேவை
என்பது அவர்களின் வலியுறுத்தல் ஆகும் .
