கிம்புலாவல வீதியின் இருபுறமும் உள்ள கடைகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை முயற்சித்ததால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த கடைகள் சட்டவிரோதமானது என கூறி, அதன் அதிகாரிகள் வீதியின் இருபுறமும் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவர்கள் சில கடைகளை உடைத்து லொறியொன்றில் ஏற்றிய நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் களத்தில்
இந்நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், எழுந்த பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஏற்றப்பட்ட பொருட்களை கடைகாரர்களிடம் திருப்பி வழங்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
