Home சினிமா அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘தேரே இஷக் மெய்ன்’ படத்தின் டிரைலர்..

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘தேரே இஷக் மெய்ன்’ படத்தின் டிரைலர்..

0

தேரே இஷக் மெய்ன்

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் உருவாகியுள்ள படம் தேரே இஷக் மெய்ன் (Tere Ishk Mein). இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம் வருகிற 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த தேரே இஷக் மெய்ன் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ பாருங்க:

முதல் நாள் காந்தா உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஆனந்த் எல். ராய் – தனுஷ் கூட்டணி

தனுஷ் – ஆனந்த் எல். ராய் கூட்டணியில் முதன் முதலில் வெளிவந்த படம் ராஞ்சனா. தமிழில் அம்பிகாபதி என்கிற தலைப்பில் வெளிவந்தது. இதுவே தனுஷின் முதல் பாலிவுட் திரைப்படமாகும். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அத்ராங்கி ரே என்கிற படத்தில் மீண்டும் இவர்கள் கூட்டணி அமைத்தனர்.

இப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில், மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம்தான் தேரே இஷக் மெய்ன். காதல் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படம் 28ஆம் தேதி திரையரங்கில் எப்படி வரவேற்பை பெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

NO COMMENTS

Exit mobile version