Home உலகம் தகனம் செய்யும் தருவாயில் சவப்பெட்டிக்குள் கேட்ட சத்தம்!

தகனம் செய்யும் தருவாயில் சவப்பெட்டிக்குள் கேட்ட சத்தம்!

0

தாய்லாந்தில் தகனம் செய்யப்படவிருந்த சவப்பெட்டியில் இருந்து பெண்ணொருவர் உயிருடன் மீண்டும் வந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தாய்லாந்தில் பாங்கொக்கின் புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 65 பெண்ணொருவரே இவ்வாறு உயிருடன் மீண்டு வந்துள்ளார்.

மரணச் சான்றிதழ்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாங்கொக்கின் நொந்தபுரியில் உள்ள வாட் ராட் பார்கொங் தாம் பௌத்த ஆலயத்தில் இறந்ததாக நினைக்கப்பட்ட குறித்த பெண், தகனம் செய்ய சில நிமிடங்களுக்கு முன் பெட்டிக்குள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பெட்டியிலிருந்து மெல்ல ஒரு தட்டும் சத்தம் கேட்டதாகவும் பெட்டியை திறந்து பார்த்த போது உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண் உயிருடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாக படுக்கையிலேயே இருந்தார் எனவும் அவரது உடல்நிலை மோசமடைந்த போது மூச்சு நின்றது போல தோன்றியதால் அவர் உயிரிழந்ததாக நினைத்ததாக பெண்ணின் சகோதரன் தெரிவித்துள்ளார்.

இந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் மரணச் சான்றிதழே இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.  

மருத்துவர்கள் 

இது தொடர்பில் தகனம் செய்வோரிடம் விளக்கிக்கொண்டிருக்கும் சமயத்தில்தான் பெட்டிக்குள் இருந்து தட்டும் சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து, பெண் உயிருடன் இருப்பது உறுதியானதும் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

பெண் மிகக் குறைந்த இரத்த சர்க்கரை நிலை, காரணமாக உயிரிழந்தது போலத் தோன்றும் நிலையில் இருந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூச்சுத் தடை அல்லது மூளை செயலிழப்பு ஏற்படவில்லை எனவும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version