தலைவன் தலைவி
பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த படம் தலைவன் தலைவி.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மேலும் தீபா, செம்பன் வினோத், சரவணன், ஆர்.கே. சுரேஷ், மைனா நந்தினி, காளி வெங்கட், ரோஷினி ஹரிப்ரியன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
வசூல் விவரம்
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள தலைவன் தலைவி படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 92 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
Source: https://cineulagam.com/article/thalaivan-thalaivii-movie-box-office-collection-1754889578
