G.O.A.T
வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாக வெளிவரவுள்ள திரைப்படம் G.O.A.T. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவன தயாரித்துள்ளது. மேலும் யுவன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி, மோகன் என பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் தான் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
G.O.A.T திரைப்படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் AI தொழில்நுட்பத்தின் மூலம் நடித்துள்ளார் என தகவல் தொடர்ந்து வெளிவந்தது. சமீபத்தில் விஜய், வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கேப்டன் இல்லத்திற்கு சென்று பிரேமலதா, விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியனை சந்தித்தனர்.
விஜயகாந்த் வரும் காட்சி
இதன்மூலம் G.O.A.T படத்தில் கேப்டன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது கேப்டனின் இரு மகன்களுடனும் நடிகர் விஜய் மிகவும் ஜாலியாக பேசினாராம். மேலும் G.O.A.T படத்தில் விஜயகாந்த் அவர்கள் வரும் காட்சி பிரமாண்டமாக இருக்கிறது என்றும் பிரேமலதா விஜயகாந்திடம் கூறியுள்ளாராம் விஜய். இந்த தகவலை பிரேமலதா விஜயகாந்த் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தபோது கூறியுள்ளார்.
விடுதலை படத்தின் மூன்றாம் பாகமா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்
G.O.A.T திரைப்படத்தில் சுமார் 3.5 நிமிடங்கள் விஜயகாந்த் AI மூலம் தோன்றுவார் என கூறப்படுகிறது. அந்த காட்சியும் பிரமாண்டமாக வந்துள்ளது என விஜய் கூறியுள்ள நிலையில், கண்டிப்பாக திரையரங்கில் விஜயகாந்த் வரும் காட்சி வெறித்தனமாக இருக்கப்போகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.