கோட்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் டபுள் ஆக்சன் திரைப்படமாக வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது கோட் திரைப்படம்.
ஆக்ஷன், எமோஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஒன்றாக வெளியாகி உலக அளவில் பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்த இந்த திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றிய நிலையில் கோட் படத்தின் டெலிவிஷன் பிரீமியர் கடந்த ஜனவரி 12ஆம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
பொங்கலுக்கு முன்னரே மாபெரும் கொண்டாட்டமாக இந்த திரைப்படம் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தளபதி விஜயின் கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதை கொண்டாடியதை போலவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போவதையும் சென்னை மதுரவாயலில் உள்ள AGS திரையரங்கில் பிரம்மாண்ட கொண்டாடினர்.
இயக்குநர் அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து நடிகை.. படத்தின் ஹீரோ இவரா
டெலிவிஷன் பிரீமியர்
இந்த நிலையில் தற்போது வெளியான ரேட்டிங் நிலவரப்படி கோட் திரைப்படத்தின் டெலிவிஷன் பிரீமியர் காட்சி 9.1 TVR புள்ளிகளைப் பெற்று சரித்திர சாதனை படைத்துள்ளது.
சாதாரண தினத்தில் ஒளிபரப்பாகி கோட் படம் கோடிக்கணக்கான தமிழ் மக்களை கவர்ந்து கோட் திரைப்படம் படைத்துள்ள இந்த சாதனை சின்னத்திரை வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. தற்போது இதனை தளபதி விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் மாபெரும் வெற்றி பெற்ற இந்த கோட் திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா, ஜெயராம், யோகி பாபு, பிரேம்ஜி அமரன் என எக்கச்சக்கமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நடிகை சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நாயகியாக நடிக்க சிவகார்த்திகேயன், திரிஷா ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.