Home இலங்கை சமூகம் இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் சேவைகளுக்கு நன்றி

இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் சேவைகளுக்கு நன்றி

0

இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தமது பணிகளை முடித்துக்கொண்டு இன்று இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் பணியில் அவர்கள் இலங்கை இராணுவத்துடன் கைகோர்த்திருந்தனர்.

இலங்கை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றிய, அவர்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைச் சென்றடைந்து, அத்தியாவசிய உதவிகளை வழங்கி மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளித்தனர்.

இலங்கை விமானப்படை 

இதற்கமைய அவர்கள் இன்று நாட்டை விட்டு புறப்பட்டு சென்ற நிலையில் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை இலங்கை விமானப்படை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளது.

அந்த வகையில் இலங்கை சமூகம் சார்பாக எமது ஊடகமும் தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

NO COMMENTS

Exit mobile version