கடந்த பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான
போராட்டம் குறித்து வாக்கு மூலம் பெறுவதற்கு வேலன் சுவாமிகளுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
நாளையதினம் (20) பலாலி பொலிஸ் நிலையத்திற்கு, நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு
வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம்
சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையானது மக்களது காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக
கட்டப்பட்டுள்ள நிலையில், அந்த விகாரைகயை அகற்றுமாறு கோரி இந்த போராட்டமானது
முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, தையிட்டி போராட்டம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு நாளையதினம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு தான் அழைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
