யாழ்ப்பாண மாநகர சபையில் தற்போது நடைபெறும் ஆட்சி சரியான திட்டமிடல்களுடன் நடைபெறுவதாக தெரியவில்லை.மாநகர மேயர் பதவியை கைப்பற்றிவிட்டோம் என்ற விடயத்துடன் அது முடிந்துவிட்டது.
எமது திட்டமிடல்கள் எதிர்காலத்தை நோக்கியதாக அமையவேண்டும்.
நகர அபிவிருத்தி என்பது கழிவகற்றும் பொறிமுறையுடன்தான் ஆரம்பிக்கும்.எனவே கழிவகற்றும் திட்டத்தை சரியான முறையில் செயற்படுத்தவேண்டும்.
குறிப்பாக யாழ்ப்பாண தண்ணீர் வளத்தை பாதுகாக்க மனித மலக்கழிவுகளை உரிய வகையில் செயற்படுத்தி மறு சுழற்சி செய்து விவசாயத்திற்கு கூட பயன்படுத்தலாம்.
இவ்வாறு யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி மற்றும் அதன் எதிர்கால செயற்றிட்டங்களை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பாக தெரிவித்தார் யாழ்.மாநகர சபை உறுப்பினர் உதயசிறி.
ஐபிசி தமிழ் உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் தெரிவித்த கருத்துக்கள் காணொளியில்..
https://www.youtube.com/embed/pitN0Qi9Cbw
