Home இலங்கை சமூகம் நானுஓயாவில் தடம்புரண்ட எல்ல ஒடிஸி

நானுஓயாவில் தடம்புரண்ட எல்ல ஒடிஸி

0

நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி புறப்பட இருந்த புகையிரதம் ஒன்று நானுஓயாவில்
தடம் புரண்டுள்ளது.

குறித்த புகையிரதம் இன்று (05) காலை 8:10 இற்கு நானுஓயாவிலிருந்து பதுளை
நோக்கி புறப்பட இருந்த நிலையில் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில்
தடம்புரண்டுள்ளது.  

பயணங்கள் வழமைக்குத் திரும்ப

புகையிரதத்தில் பதுளை நோக்கிப் பயணம் மேற்கொள்ள வருகை தந்த பயணிகள்
பாரிய சிரமங்களுக்கு உட்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த புகையிரதத்தில் வெளிநாட்டு
சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் எல்ல நோக்கி செல்வதற்கு வருகை தந்து தடம்புரண்ட
புகையிரதத்தினை தண்டவாளங்களில் அமர்த்தும் வரை சுமார்
இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக காத்திருக்க நேரிட்டுள்ளது

எவ்வாறாயினும் மிக விரைவில் புகையிரதம் திருத்தப்பட்டு பயணங்கள் வழமைக்குத்
திரும்பவுள்ளதாக நானுஓயா புகையிரத நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய
அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version