Home இலங்கை குற்றம் கண்டியில் அவுஸ்திரேலிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

கண்டியில் அவுஸ்திரேலிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

0

கண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது தமது 9 இலட்சம்
ரூபா பணமும் மூன்று தங்க மோதிரங்களும் திருடப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பெண்
ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 20ஆம் திகதி மாலை 4 மணியளவில் இரு பெண்களுடன் ஹோட்டலுக்கு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

21 ஆம் திகதி காலை அறைக்குள் யாரோ நுழைந்து இந்த திருட்டை செய்துள்ளனர் என பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸில் விசாரணை

தனது சுகாதார அட்டை மற்றும் இரண்டு கிரெடிட் கார்டுகளும் திருடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ராஜபக்‌ஷ
தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Source: https://tamilwin.com/article/the-fate-of-the-australian-woman-in-kandy-1729739965

NO COMMENTS

Exit mobile version