ஒரு நாட்டின் குற்றவாளி வேறொரு நாட்டில் பதுங்கியிருந்தால் அவர் தற்போது இருக்கும் நாட்டின் பொலிஸாரே அவர்களை கைது செய்து ஒப்படைப்பார்கள் என பிரித்தானியாவில் வசிக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக நேபாளில் மறைந்து வாழ்ந்த இலங்கையில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை நேபாள் நாட்டு பொலிஸார் கைது செய்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருப்பார்கள்.
இதேபோல, இந்தோனேசியாவில் பதுங்கியிருந்த கெஹல்பத்தர பத்மே குழுவினரையும் இந்தோனேசிய பொலிஸாரே கைது செய்திருப்பார்கள்.
எனவே, இதில் அரசாங்கத்திற்கு எந்தவித பெருமையும் இல்லை என திபாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஆட்சிக்கு வந்தவுடன் அப்போதைய பாதாள உலக தலைவர்களும் அவர்களின் உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.
ஆனால், அப்போதைய அரசாங்கம் அதனை ஒரு பெரிய விடயமாக கருதவில்லை எனவும் திபாகரன் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால், அரசாங்கம் உண்மையில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் நாட்டில் நிறைய இருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
