Home இலங்கை சமூகம் அதிகளவு சேகரிக்கப்படும் மரக்கறிகள் – வர்த்தக முகவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல

அதிகளவு சேகரிக்கப்படும் மரக்கறிகள் – வர்த்தக முகவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல

0

பதுளை மாவட்டத்தில் உள்ள வெலிமடை மற்றும் கெப்பட்டிபொல உள்ளிட்ட முக்கிய
விநியோக பகுதிகளிலிருந்து தற்போது அதிகளவு மரக்கறிகள் சேகரிக்கப்பட்டு
வருவதாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், கோவா, கரட் மற்றும் போஞ்சி போன்ற முக்கிய
மரக்கறி வகைகள் தற்போது மொத்தமாக வந்து சேர்கின்றன.

எல்ல -வெல்லவாய வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல

பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்காக, இந்த மரக்கறிகளை கொண்டு
செல்லும் வர்த்தக முகவர்கள், தற்போது திறக்கப்பட்டுள்ள எல்ல -வெல்லவாய வீதியை
பயன்படுத்துமாறு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த கடினமான காலகட்டத்தில் பொதுமக்களுக்கு மரக்கறிகள் எளிதில் கிடைக்கச்
செய்வதற்கு சீரான போக்குவரத்தை பராமரிப்பது அவசியம் என்று அமைச்சு
தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version