Home இலங்கை சமூகம் அனுராதபுரத்தில் புதையல் அகழ்வு : முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

அனுராதபுரத்தில் புதையல் அகழ்வு : முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

0

அனுராதபுரம் (Anuradhapura) கலாவெவ அணையை உடைத்து புதையல் அகழ்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தை அகில இலங்கை (Sri Lanka) விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அழைப்பாளர் நாமல் கருணாரத்ன (Namal Karunaratne) வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, பொறுப்பான அதிகாரிகளின் கண்களில் படாத வகையில் இந்த அகழ்வுகள் புத்திசாலித்தனமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான அணைக்கட்டு 

இந்தநிலையில், கலாவெவ பிரதான அணைக்கட்டு புனரமைப்பதற்காக அகழ்வு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் வினவிய போது தமக்கு எதுவும் தெரியாது எனவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், அங்கிருந்த மிகவும் பெறுமதியான புதையல்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/the-mystery-of-anuradhapuram-1718865801

NO COMMENTS

Exit mobile version