Home இலங்கை சமூகம் வடக்கில் அருகிவரும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை: ஆளுநர் விசனம்

வடக்கில் அருகிவரும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை: ஆளுநர் விசனம்

0

துரதிஷடவசமாக வடக்கு பிரதேசங்களில் விளையாட்டுக்களில் ஈடுபடுவோரின்
எண்ணிக்கை அருகிவருகின்றது என  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

சமூகப்பிறழ்வு

“இன்றைய இளைய சமூகத்தின் மத்தியில் சமூகப்பிறழ்வு அதிகரித்துச்
செல்கின்றமைக்கு, விளையாட்டுக்களில் பங்கேற்காமை பிரதான காரணமாகும்.

உண்மையில்
விளையாட்டுக்களிலும், கலைச் செயற்பாடுகளிலும் இளையோர் நாட்டம் செலுத்தினால்
சமூகப்பிறழ்வுகள் எவ்வளவோ குறைவடையும்.

விளையாட்டுக்கள் பொழுதுபோக்குக்கு மாத்திரம் உரியவை அல்ல. அவை
எங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கும், தலைமைத்துவத்தை
மேம்படுத்திக்கொள்வதற்கும் பெரிதும் உதவுகின்றன.

சிறந்த விளையாட்டு
வீரர்களிடம் மற்றையவர்களை மதிக்கும் பண்புகளையும் காணலாம்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version