Home இலங்கை சமூகம் கடமையிலிருந்த இராணுவ வீரர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு !

கடமையிலிருந்த இராணுவ வீரர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு !

0

கடமையிலிருந்த இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

பத்தரமுல்லை – அக்குரேகொடவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் கடமையிலிருந்த போதே அவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ வீரர்

மீரிகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மரணித்த இராணுவ வீரர், இராணுவ தலைமையகத்தின் பாதுகாப்பு கூடத்தில் இரு இராணுவ வீரர்களுடன் கடமையிலிருந்த போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version