படிக்க முடியாத மாணவர்கள் எவரும் இல்லை ஆனால் படிப்பித்துக் கொடுக்க முடியாத
ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர் என்பது ஒரு திறன். அது ஒரு கலை, அதுக்கு
பயிற்சிகள் எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுனர் போராசிரியர் ஜெயந்தலால்
ரெத்னசேகர தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட
விவேகானந்தபுரம் பாமகள் வித்தியாலத்தில் இன்று (18.06.2026) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர்
மேலும் தெரிவிக்கையில்,
ஆசிரியர் என்பது ஒரு திறன்
“. ஆசிரியர் என்பது ஒரு திறன். அது ஒரு கலை, அதுக்கு
பயிற்சிகள் எடுக்க வேண்டும். அதிகம் ஆசிரியர்கள் தெரிவிப்பது அந்த
வகுப்பறையில் எனக்கு படிப்பிக்க முடியாது இந்த வகுப்பறையில் எனக்கு படிப்பிக்க
முடியாது, இந்தப் பாடம் எனக்கு படிப்பிக்க முடியாது என தெரிவிக்கின்றார்கள்.
ஆசிரியர் என்பது பயிற்சி எடுக்க வேண்டும் அது இலகுவில் அனைவருக்கும் வராது.
ஆசிரியர் தொழில் என்பது என்பது ஒரு கலை, அது ஒரு விஞ்ஞானம், அனைவருக்கும்
இலகுவில் அது வராது.
ஆசிரியர் தொழிலுக்கு விருப்பத்துடன் வரவேண்டும் ஆசிரியர்
தொழிலுக்கு விருப்பம் இல்லாமல் வருபவர்களும் உள்ளார்கள். அவ்வாறு
வருபவர்கள்தான் ஆசிரியர் தொழிலுக்கு வந்தவுடன் இடமாற்றம் கேட்கின்றார்கள்.
சிலர் வேறு தொழில் கிடைக்கவில்லை என்றால் ஆசிரியர் தொழிலுக்கு வருவார்கள்.
வேறு தொழில் கிடைக்கவில்லை என்பதற்காகத்தான் நான் ஆசிரியர் தொழிலுக்கு
வந்திருக்கின்றேன்.
தெரிவிப்பார்கள். அவ்வாறு வரக்கூடாது. முதலாவது தெரிவாக
ஆசிரியர் தொழில்தான் இருக்க வேண்டும். விருப்பமில்லாதவர்கள் ஆசிரியர்
தொழிலுக்கு வந்து இரண்டு மாதங்களில் எங்களுக்கு இடமாற்றம் தாருங்கள் எனக்கு
இருக்கின்றார்கள் என அவர் இதன்போது” தெரிவித்துள்ளார்.
Source: https://ibctamil.com/article/there-is-no-one-who-cannot-read-1781787242
