Home இலங்கை சமூகம் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு அச்சுறுதல்

முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு அச்சுறுதல்

0

நாடு முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களில், ‘ஹெய்லிங்
செயலிகள்’ மூலம் இயங்கும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு ஏற்படும்
அச்சுறுத்தல்கள் குறித்து முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விவாதிக்க, சுற்றுலாப் பொலிஸில் இணைக்கப்பட்ட மூத்த பொலிஸ்
அதிகாரிகளுடன், பொலிஸ் ஆணையகம் இந்த வாரம் ஒரு சந்திப்பை நடத்தியது. 

ஆணையகம் முறைப்பாடுகள் 

சுற்றுலாப் பகுதிகளில் செயல்படும் ‘முச்சக்கர வண்டி மாஃபியா’ உறுப்பினர்களிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக பொதுமக்கள் மற்றும்
விருந்தக உரிமையாளர்கள் மற்றும் மானிகள் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளை
இயக்குபவர்களிடமிருந்து, ஆணையகம் முறைப்பாடுகளை பெற்றதைத் தொடர்ந்து இந்தக்
கூட்டம் கூட்டப்பட்டது.

காலி, தம்புள்ளை, சிகிரியா போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களிலிருந்தும் பிற
பகுதிகளிலிருந்தும், இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்தநிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க நடவடிக்கைகளை
விரைவுபடுத்துமாறு பொலிஸ் தரப்பிடம், பொலிஸ் ஆணையகம் கோரிக்கை விடுத்துள்ளது. 

you may like this

NO COMMENTS

Exit mobile version