Home இலங்கை சமூகம் கடற்றொழிலுக்கு சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள் படகுடன் மாயம்

கடற்றொழிலுக்கு சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள் படகுடன் மாயம்

0

 கடந்த 16 ஆம் திகதி இரவு 8 மணியளவில் கிரிந்த மீன்வளத் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பகல்நேரப் படகு மூன்று கடற்றொழிலாளர்களுடன் காணாமல் போயுள்ளதாக கிரிந்த காவல்துறை தெரிவித்துள்ளது.

மறுநாள் காலை கரைக்குத் திரும்பவிருந்த படகு குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கிரிந்த மீன்வள ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

 கணவாய் பிடிக்க சென்றவர்கள்

நைல் மரைன் என்ற பெயரைக் கொண்ட காணாமல் போன படகு, மீன்பிடிக்கச் செல்வதற்கு முன்பு கிரிந்த கடற்படை கடலோர காவல்படை முகாமில் குறிப்புகளை வைத்துவிட்டு, கணவாய்  பிடிக்க சென்றதாக படகின் உரிமையாளர் நிலம் முதீன் தெரிவித்தார்.

காணாமற்போன மீனவர்களை தேடும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version