Home சினிமா 100 கோடியை கூட தொடவில்லை.. படுதோல்வியடைந்த தக் லைஃப் படத்தின் வசூல் விவரம்

100 கோடியை கூட தொடவில்லை.. படுதோல்வியடைந்த தக் லைஃப் படத்தின் வசூல் விவரம்

0

தக் லைஃப்

மணி ரத்னம் இயக்கத்தில் உருவான தக் லைஃப் திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் 9 நாட்கள் முடிவில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கமல் ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

கேங்ஸ்டர் கதைக்களம், கமல் – மணி ரத்னம் கூட்டணி என பல எதிர்பார்ப்புடன் இப்படத்தை பார்க்க சென்று ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கடுமையான விமர்சனங்களும், நெட்டிசன்கள் இப்படத்தை ட்ரோல் செய்தும் வந்தனர்.

வசூல் 

முதல் நாள் உலகளவில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்தது. ஆனால், அதன்பின் பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்த தக் லைஃப் படுதோல்வியடைந்துள்ளது.

இந்த நிலையில், 9 நாட்களை கடந்திருக்கும் இப்படம் உலகளவில் ரூ. 88 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. ரூ. 100 கோடி கூட வருமா என்பதே சந்தேகம்தான் என கூறுகின்றனர்.  

Source: https://cineulagam.com/article/thug-life-movie-box-office-1749869937

NO COMMENTS

Exit mobile version