Home இலங்கை சமூகம் இந்திய அரசு வழங்கிய உழவு இயந்திரங்கள்: கேள்வியெழுப்பியுள்ள விவசாயிகள்

இந்திய அரசு வழங்கிய உழவு இயந்திரங்கள்: கேள்வியெழுப்பியுள்ள விவசாயிகள்

0

இந்திய அரசின் நன்கொடையின்
கிழ் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக
எந்தவித பயன்பாடுகளும் இன்றி காணப்படும் நிலையில், விவசாயிகளுக்கு
ஒப்பந்த அடிப்படையில் அதனை வழங்கி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திகுட்பட்ட வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும்
முல்லைத்தீவு விவசாய சேவை மையங்களில் ஆளுநரின் வழிகாட்டுதலின் கீழ்  ஐநூறுவரையான உழவு
இயந்திரங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

அரசாங்க  நடவடிக்கை

விவசாயிகள் இலவசமாக அல்லது தவணை அடிப்படையில் குறித்த உழவு இயந்திரங்களை
கோரினர்.

ஆனால் அரசாங்கம் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

முறையாகப் பயன்படுத்தப்படாமலும் பராமரிக்கப்படாமலும் குறித்த உழவு
இயந்திரங்களின் மதிப்பு ஆண்டுதோறும் குறைந்து வருகிறன.

மேலும். மதிப்புக் குறைப்பு
மற்றும் கைவிடப்பட்ட அரசாங்க சொத்துக்களுக்கு யார் பொறுப்பு என்ற கேள்விகளும்
கானப்படுன்றன.

இவ்வாறு வழங்கப்பட்ட உழவு இயந்திரங்களுக்குரிய விவசாய மையங்களுக்கு எந்த
ஓட்டுநர்களும் நியமிக்கப்படவில்லை.

அத்துடன் மாகாண சபையால் உழவு இயந்திரங்களின் உரிமை விவசாய சேவை மையங்களுக்கு
மாற்றப்படவில்லை.

கொள்முதல் வழிகாட்டுதல்

கொள்முதல் வழிகாட்டுதல்களின்படி விவசாய சேவை மையங்களால்
நடத்தப்பட்ட ஏலம் உரிமை முறையாக மாற்றப்படவில்லை.

மேலும், விவசாய சேவைக் குழுக்கள்
மற்றும் விவசாய அமைப்புகள் விவசாயிகளுக்கு நன்கொடை அளிக்கவோ அல்லது விற்கவோ
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவற்றை ஒன்றில் பயன்படுத்த வேண்டும் அல்லது விவசாயிகளின்
தேவைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் கடன் அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை
எடுக்க வேண்டும்.

இல்லையேல் விற்பனை செய்து விட்டு பணத்தினை வேறு தேவைகளுக்கு
பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு பாராமுகமாக விடுவதற்க்கான காரணம் என்ன?எனவும்
விவசாயிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version