Home விளையாட்டு இந்தியாவுக்கு எதிராக அவுஸ்ரேலிய வீரர் அடித்த மிக நீண்ட சிக்ஸ் (வைரலாகும் காணொளி)

இந்தியாவுக்கு எதிராக அவுஸ்ரேலிய வீரர் அடித்த மிக நீண்ட சிக்ஸ் (வைரலாகும் காணொளி)

0

மூன்றாவது போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் அவுஸ்ரேலிய அணியை தோற்கடித்தது.

முதலாம் இணைப்பு

அவுஸ்ரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ரி20 போட்டியில் அவுஸ்ரேலிய வீரர் ரிம் டேவிட் மிக நீண்ட சிக்ஸை(129 meter) அடித்துள்ளார். 

இந்தியா- அவுஸ்ரேலியா இடையிலான 05 போட்டிகள் கொண்ட ரி 20 தொடரில் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்றது.

தீர்மானம் மிக்க மூன்றாவது போட்டி தற்போது ஹோபார்ட்டில் உள்ள நிஞ்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

மிக நீண்ட சிக்ஸ்

இதில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 06 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்களை பெற்றுள்ளது.

 இந்தப்போட்டியில் இந்திய பந்து வீ்சாளர் அக்சர் பட்டேல் வீசிய ஓவரில் அவுஸ்ரேலிய வீரர் ரிம் டேவிட்ட மிக நீண்ட சிக்ஸை அடித்துள்ளார்.

தற்போது 187 என்ற ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

NO COMMENTS

Exit mobile version