Home இலங்கை அரசியல் தோல்விகளுக்கும் இழப்புக்களுக்கும் பயந்தவர்கள் நாமல்ல – சட்டத்தரணி மணிவண்ணன்

தோல்விகளுக்கும் இழப்புக்களுக்கும் பயந்தவர்கள் நாமல்ல – சட்டத்தரணி மணிவண்ணன்

0

இழப்புகளுக்கோ, தேர்தல் தோல்விகளுக்கோ பயந்தவர்களாக நாங்கள் ஒதுங்கி
போகப் போகமாட்டோம் என தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் உறுப்பினர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமைக் காரியாலயம் நேற்றைய தினம் (03)
யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட பின்னர் ஊடகங்களுக்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கூறுகையில், “தமிழ் மக்களின் எதிர்கால நடவடிக்கைகளின் மிகக் காத்திருமான
பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாளில் இன்று நாங்கள் எல்லோரும்
கலந்து கொண்டிருக்கிறோம்.

மக்களுடைய எதிர்காலம் 

எமது அரசியல் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக அல்லது அதனுடைய வகிபாகம்
தொடர்பாக பலரும் பலவிதமாக கருத்துக்கள் சொல்ல முடியும்.

ஒரு பலவீனமான அமைப்பாக எமது அமைப்பை எங்களுடைய கட்சியை பலரும் விசாரிக்க
விமர்சிக்கக்கூடும்.

ஆனால் தமிழ் மக்கள் கூட்டணி தான் தமிழ் மக்களுடைய எதிர்காலம் என்கின்ற அசைக்க
முடியாத செய்தியை நான் இந்த சந்தர்ப்பத்தில் கூறுகின்றேன். 

009 ஆம் ஆண்டு வரை தங்களுடைய இன்னுயிர்களை ஈகம் செய்து ஒப்பற்ற தியாகங்களை
புரிந்து இந்த மண்ணின் எழுச்சிக்காக தமிழ் மக்களுடைய உரிமைக்காக களமாடியை
மடிந்த அத்தனை உயிர்களின் ஆத்மாக்கள் மீது சத்தியம் செய்தவர்களாக நாங்கள்
எங்களுடைய பயணத்தை எங்களுடைய அரசியல் இயக்கத்தை எங்களுடைய அரசியல் கட்சியை
நாங்கள் முன்னோக்கி நடத்திக் கொண்டிருக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version