Home இந்தியா நெடுந்தீவு கடலில் உயிரிழந்த இந்திய கடற்றொழிலாளர்: இழப்பீடு வழங்கிய மு.க.ஸ்டாலின்

நெடுந்தீவு கடலில் உயிரிழந்த இந்திய கடற்றொழிலாளர்: இழப்பீடு வழங்கிய மு.க.ஸ்டாலின்

0

நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக கடற்றொழிலாளர் படகொன்று இலங்கை (Sri Lanka) கடற்படையினரின் படகொன்றுடன் மோதியதில் உயிரிழந்த கடற்றொழிலளரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த கடற்றொழிலாளரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நிரந்தர தீர்வு

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குமாறு தமிழக அரசு பலமுறை கடிதங்கள் மூலமாகவும், நேரிலும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து உரிய தூதரக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இன்னும் பல கடற்றொழிலாளர்களை இழக்க நேரிடும் என்றும் தனது அறிக்கையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source: https://ibctamil.com/article/tn-fisherman-death-stalin-announces-compensation-1722521685

NO COMMENTS

Exit mobile version