Home இலங்கை பொருளாதாரம் தங்க விலையில் தொடர் மாற்றம் : நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

தங்க விலையில் தொடர் மாற்றம் : நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

0

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக (Sri Lanka) சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

அண்மையில் திடீரென குறைவடைந்த தங்க விலையானது நேற்று (14) அதிகரித்த நிலையில் இன்று (15.10.2024) மீண்டும் அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 778,364 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,460 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 219,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,180 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 201,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை (21 karat gold 1 grams) 24,030 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) . 192,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

செட்டியார் தெரு விபரங்கள்

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 210,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 194,200 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/today-gold-price-in-srilanka-and-gold-world-market-1728971164

NO COMMENTS

Exit mobile version