Home இலங்கை அரசியல் இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற அமர்வு சற்று முன்னர் ஆரம்பம்

இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற அமர்வு சற்று முன்னர் ஆரம்பம்

0

இன்றைய நாளுக்கான (06.02.2025) நாடாளுமன்ற அமர்வுகள் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி (Rizvie Salih) தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

காலை 9.30க்கு ஆரம்பமான இன்றைய அமர்வுகள் மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளது.

அதன்படி காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் 1 முதல் 6 வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 11.30 முதல் மாலை 5.00 வரை புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மாலை 5.00 முதல் 5.30 வரை  ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/bMR15GxkRAo

NO COMMENTS

Exit mobile version